தனுஷ் இல்லை.. குபேராவில் முதலில் நடிக்க இருந்த முன்னணி ஹீரோ! விலகியது ஏன் தெரியுமா?
தனுஷ் சமீபத்தில் ரிலீஸ் ஆன குபேரா படத்தில் பிச்சைக்காரனாக நடித்து இருந்தார். அந்த படத்திற்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்து ஹிட் ஆனது, ஆனால் தமிழில் வசூல் வரவில்லை.
இருப்பினும் தனுஷின் நடுப்புக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் கூறி இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது அந்த ரோலில் நடிக்க முதலில் இயக்குனர் தேர்வு செய்தது தனுஷ் இல்லை என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் தேவரகொண்டா
முதல் விஜய் தேவரகொண்டாவை தான் இயக்குனர் சேகர் கம்முலா அணுகினாராம். அவர் அந்த ரோலுக்கு சரியாக இருப்பார் என இயக்குனர் நினைத்தாலும், விஜய் தேவரகொண்டா பிச்சைக்காரனாக நடிக்க மறுத்துவிட்டாராம்.
நான் அப்படி நடித்தால் என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் காரணம் கூறி இருக்கிறார். அதன் பின் தான் தனுஷை அணுகி கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
