ஜோதிகா இல்லை.. சந்திரமுகியாக முதலில் நடிக்க இருந்தது இவரா
பி.வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்து இருந்த படம் சந்திரமுகி.
"ரா ரா" என சந்திரமுகி கெட்டப்பில் ஜோதிகா ஆடிய டான்ஸ் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த படம் சூப்பர்ஹிட் ஆக ஜோதிகாவின் நடிப்பும் ஒரு காரணம் என சொல்லலாம்.
முதலில் நடிக்க இருந்தது இவரா..
முதலில் அந்த ரோலில் நடிகை சினேகா தான் நடிக்க இருந்தாராம். தன்னால் சில தவிர்க்கமுடியாத காரணத்தால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என ஒரு பேட்டியில் சினேகா தெரிவித்து இருக்கிறார்.
ஒருவேளை சினேகா சந்திரமுகி ரோலில் நடித்து இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என நெட்டிசன்கள் தற்போது கமெண்ட் செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.
சமீபத்தில் ரிலீஸ் ஆன சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடித்த கங்கனா கடும் ட்ரோல்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.