லோகேஷ் இல்லை.. ரஜினி - கமல் இணையும் பட இயக்குனர் இவர்தான்!
சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கமல் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு படம் நடிக்க போவதாக கடந்த சில மாதங்களாகவே கூறப்பட்டு வருகிறது. அதை கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் உறுதி செய்து இருந்தார்.
அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப்போவதாக தான் தகவல் வந்தது. ஆனால் லோகேஷ் சொன்ன கதை அதிகம் violence ஆக இருப்பதாக நினைத்த ரஜினி அது வேண்டாம் என முடிவெடுத்து விட்டாராம்.

நெல்சன்
மேலும் ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நெல்சன்ரஜினியிடம் மேலும் ஒரு கதை சொல்லி இருக்கிறார். அது ரஜினிக்கு பிடித்துவிட தான் கமல் உடன் இணையும் படத்தை நெல்சன் தான் இயக்கவேண்டும் என அவர் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஜினி ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். அது முடிந்தபிறகு தான் ரஜினி - கமல் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் News Lankasri
18 வயதுக்கு மேற்பட்டோர் சேர்ந்து வாழலாம்; லிவ்-இன் உறவுக்குத் தடையில்லை - உயர்நீதிமன்றம் IBC Tamilnadu