தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல நடிகை.. கர இயக்குனர் சொன்ன தகவல்
தனுஷ் அடுத்து நடித்து இருக்கும் படம் கர. போர் தொழில் பட புகழ் இயக்குனர் விக்னேஷ் ராஜா தான் இந்த் படத்தை இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மமிதா பைஜூ நடித்து உள்ளார். பிஸி நடிகையான மமிதாவை கருப்பான கிராமத்து பெண் ரோலில் இயக்குனர் நடிக்க வைத்திருந்ததும் நெட்டிசன்களால் விமர்சிக்கப்படுகிறது.

முதல் சாய்ஸ் அவர் இல்லை
இது பற்றி பேசிய இயக்குனர் விக்னேஷ் ராஜா, இந்த ரோலுக்கு முதலில் 3BHK , மை லார்ட் போன்ற படங்களில் நடித்த சைத்ரா ஜே அச்சாரை நடிக்க வைக்க தான் விரும்பியதாகவும், அவரை அணுகி கதை சொன்னபோது, அவர் நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம்.
அதன் பிறகு தான் மமிதா பைஜூவை அந்த ரோலில் நடிக்க வைத்தேன் என விக்னேஷ் ராஜா கூறியுள்ளார். இப்படி ஒரு ரோலில் நடிக்க மமிதா ஒப்புக்கொள்ளமாட்டார் என முதலில் நினைத்தேன், ஆனால் அவர் ஓகே சொல்லி ஆச்சர்யம் கொடுத்தார் எனவும் இயக்குனர் கூறியுள்ளார்

டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri