அது என் கணவர் இல்லை, fraud.. சீரியல் நடிகை ஸ்வேதா காட்டமான புகார்
விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ஸ்வேதா. அவரது காதலர் என கூறிக்கொண்டு ஆதி என்பவர் நேற்று ஒரு பிரபல youtube சேனலுக்கு பேட்டி கொடுத்து இருந்தார்.
மேலும் ஸ்வேதா உடன் அவர் இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு இருந்தார். ஸ்வேதாவின் கணவர் என அவர் கூறிய நிலையில் அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.
அவன் fraud..
இந்நிலையில் நடிகை ஸ்வேதா தற்போது இன்ஸ்டாகிராமில் கோபமாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். "அவன் என கணவர் கிடையாது, காதலரும் கிடையாது. அவன் மீது வழக்குகள் இருக்கிறது. போலீஸ் தேடிக்கொண்டிருந்தது."
"நாங்கள் பிரிந்துவிட்டோம். தற்போதும் ஒன்றாக இருப்பது போல பொய்யாக பேட்டி கொடுத்து என் வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறார். இது பற்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க போகிறேன்" என ஸ்வேதா பதிவிட்டு இருக்கிறார்.


