நாட் ரீச்சபிள் திரைவிமர்சனம்
சந்துரு முருகானந்தம் இயக்கத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது நாட் ரீச்சபிள் படம். இந்த க்ரைம் திரில்லர் படம் எப்படி இருக்கிறது? முழு விமர்சனம் இதோ.
கதை
மூன்று பெண்கள் காணாமல் போகிறார்கள், அதில் இரண்டு பேர் இறந்துவிடுகிறார்கள். அவர்கள் எப்படி இறந்தார்கள், இன்னொரு பெண்ணை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பது தான் இந்த படத்தின் கதை.
இந்த சம்பவம் பற்றி புலன் விசாரணை செய்யும் அதிகாரிகளாக வருகிறார்கள் ஹீரோ விஷ்வா மற்றும் ஹீரோயின் சாய் தன்யா. ஹீரோ மற்றும் ஹீரோயின் இடையே விவாகரத்து பற்றிய சொந்த விஷயங்கள் ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் விசாரணையில் அந்த பெண்கள் பற்றி கண்டறியும் அதிர்ச்சி விஷயங்கள் தான் படத்தின் பரபரப்பான மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
எடுத்துக்கொண்ட கதைக்களம் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றியது. அதில் இயக்குனர் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். இருந்தாலும் யூகிக்க கூடிய அளவில் இருந்த திரைக்கதையை கொஞ்சம் கவனித்து இருக்கலாம்.
ஹீரோ விஷ்வா, ஹீரோயின் சாய் தன்யா குறை சொல்லாத அளவுக்கு நடித்து இருக்கிறார்கள். பெரிய ஸ்டார் காஸ்ட் இல்லாமல் புதுமுக நடிகர்களை மட்டும் வைத்து சிறப்பாகவே எடுத்திருக்கிறார்கள்.
க்ளாப்ஸ்
- கதைக்களம்.
- சொல்ல வந்த கருத்து.
- குறை சொல்லாத அளவுக்கு இருந்த இசை.
பல்ப்ஸ்
கணிக்கும்படியாக இருக்கும் ஸ்கிரீன்ப்ளே தான் இந்த படத்தின் நெகடிவ்
மொத்தத்தில் திரில்லர் ரசிகர்கள் நாட் ரீச்சபிளுக்கு ஒரு முறை விசிட் அடிக்கலாம்.