சூர்யா இல்லை, கஜினி படத்தில் நான் தான் முதலில் நடிக்க இருந்தேன்.. முன்னணி ஹீரோ
நடிகர் சூர்யா கெரியரில் முக்கிய படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது கஜினி. முருகதாஸ் இயக்கிய இந்த படம் தமிழில் மிகப்பெரிய ஹிட் ஆக, அதன் பின் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் பெரிய ஹிட் ஆனது.
கஜினியில் சூர்யாவின் நடிப்புக்கு பெரிய அளவில் பாராட்டு பெற்ற ஒன்று. ஆனால் அந்த கதை முதலில் அவரிடம் வந்தது அல்ல, பல நடிகர்கள் நிராகரித்த பிறகு தான் அந்த வாய்ப்பு சூர்யாவுக்கு சென்றது.
மாதவன்
நடிகர் மாதவன் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த பட வாய்ப்பு தன்னிடம் தான் முதலில் வந்ததாக கூறி இருக்கிறார்.
இரண்டாம் பாதி கதை செல்லும் விதம் தனக்கு பிடிக்கவில்லை என்பதால் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறி இருக்கிறார் மாதவன்.
மேலும் சூர்யா அந்த படத்தில் சிறப்பாக நடித்து இருந்ததாகவும் பாராட்டி இருக்கிறார். சிக்ஸ் பேக் வேண்டும் என்பதற்காக சூர்யா ஒரு வாரம் உப்பு சாப்பிடாமல் இருந்தார் என அறிந்து வியந்ததாகவும் மாதவன் கூறியுள்ளார்.