பாதியில் நிறுத்தப்படுகிறதா ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 Reloaded.. இதுதான் பிரச்சனையா, ரசிகர்கள் ஷாக்
டான்ஸ் ஜோடி டான்ஸ்
படங்களை ஓரங்கட்டி இப்போது சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் தான் இப்போதெல்லாம் மக்களிடம் பிரபலம்.
அந்த வகையில் ரசிகர்கள் அதிகம் ரசித்து பார்க்கும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக உள்ளது ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 Reloaded. அர்ச்சனா தொகுத்து வழங்க சினேகா, பாபா பாஸ்கர் மற்றும் வரலட்சுமி நடுவர்களாக உள்ளனர்.
ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு, ஆச்சரியத்தின் உச்சமாக நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
புகார்
சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சிவன், முருகன், விநாயகர் போன்று கடவுள் வேடங்களை அணிந்து நடனம் ஆடி இருந்தார்கள்.
அப்போது நடனமாடிய சில ஜோடி ஆபாசமாக நடந்து நடனமாடிய கடவுள் வேடத்தில் இருந்தவர்களையும் நடனமாட விட்டு இருந்தார்கள். இதனால் இந்து மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தி இருப்பதாக கூறி இந்து முன்னணி அமைப்பு ட்விட்டரில் புகார் தெரிவித்திருந்தார்கள்.
ஜீ தமிழ் சேனலுக்கு மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸில் கடந்த 12ம் தேதி ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி கேபிள் டெலிவிஷன் விதிமுறைகளை மீறி இருப்பதாக புகார் வந்திருக்கிறது.
இந்த விவகாரம் இப்போது பரபரப்பாக பேசப்பட ரசிகர்கள் இந்த பிரச்சனையால் நிகழ்ச்சியை நிறுத்திவிடுவார்களா என கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.