விஜய் டிவியில் தொடங்கும் புது சீரியல்.. டைட்டில் இதுதான்
ஒரு மொழியில் சீரியல் ஹிட் ஆனால் அதே கதையை இந்தியாவில் இருக்கும் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்வது வழக்கமாகி விட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி என பல மொழி சின்னத்திரையிலும் இது நடந்து வருகிறது.
தற்போது தெலுங்கில் மா டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் Nuvvu Nenu Prema என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கின்றனர்.
விஜய் டிவி - புது சீரியல்
விஜய் டிவியில் தான் Nuvvu Nenu Prema ரீமேக் ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த சீரியலுக்கு "நீ நான் காதல்" என பெயரிட்டு இருக்கின்றனர்.
தற்போது காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் சுவாமிநாதன் தான் தெலுங்கு Nuvvu Nenu Premaவில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால் தமிழ் ரீமேக்கில் வேறு ஒரு நடிகர் தான் ஹரோவாக நடிக்கப்போகிறாராம்.
தாய் கிரேஷன்ஸ் தயாரிக்கும் இந்த சீரியலில் ஹீரோயினாக வர்ஷினி நடிக்க போகிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரபல நடிகருடன் சமந்தா இரண்டாம் திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா