வாணி ராணி, செவ்வந்தி சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை.. வெளியான அதிர்ச்சி தகவல்!
சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களை இயக்கிவர் தான் இயக்குனர் ஓ.என்.ரத்தினம். இவர் நடிகை ரேவதி மற்றும் ராதிகா போன்ற பிரபல நடிகைகளை வைத்து சீரியல் இயக்கியுள்ளார்.
தற்போது இவர் செவ்வந்தி, பிரியமான தோழி மற்றும் பாண்டவர் இல்லம் என்ற தொடர்களை இயக்கி வருகிறார். ஓ.என்.ரத்தினம் பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தற்கொலை
சமீபத்தில் ரத்தினம் தனது மனைவியுடன் சில கருத்துவேறுபாடு ஏற்பட்டதாம். இதனால் இருவருக்கு இடையே சண்டை வந்துள்ளது.
இன்று (25-05-2023) ரத்தினம் தன்னுடைய குழந்தைகளை அழைத்து வர பேருந்து நிலையத்திற்கு சென்று இருக்கிறார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரத்தினத்தின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது இந்த சம்பவம் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
சினிமா ஆசை காட்டி இளம் பெண்ணிடம் அத்து மீறிய மலையாள நடிகர்.. வழக்கில் திடுக்கிடும் திருப்பம்