Obsession Box Office: இந்தியாவில் வசூல் வேட்டையாடி வரும் Obsession திரைப்படம்.. அடேங்கப்பா இத்தனை கோடியா
Obsession
சமீபத்தில் ஹாலிவுட் திரையுலகில் இருந்து வெளியான திரைப்படம் Obsession. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சைக்கலாஜிக்கல் ஹாரர் கதைக்களத்தில் உருவான இப்படத்தை இயக்குநர் கரி பார்க்கர் (Curry Barker) இயக்கியிருந்தார். இப்படத்தில் மைக்கேல் ஜான்ஸ்டன் (Michael Johnston), இண்டே நவரெட் (Inde Navarrette) இணைந்து நடித்திருந்தனர்.

வசூல்
இப்படம் ரூ. 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவ்வளவு குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை உலகளவில் $286.5 மில்லியன் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் Obsession திரைப்படம் செய்துள்ள வசூல் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, இந்திய பாக்ஸ் ஆபிஸில் Obsession ரூ. 75 கோடி வசூலித்துள்ளது. இது இப்படத்திற்கு இந்தியாவில் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
