Obsession திரை விமர்சனம்

By Tony May 30, 2026 04:40 AM GMT
Report

Obsession திரை விமர்சனம்

ஹாலிவுட்டில் கேரி பார்க்கர் இயக்கத்தில் வெறும் 10 கோடியில் எடுத்த படம் உலகம் முழுவதும் ரூ 1000 கோடி வசூலை நோக்கி செல்லும் இந்த Obsession எப்படியுள்ளது பார்ப்போம்.

Obsession திரை விமர்சனம் | Obsession Movie Review

கதைக்களம்

பியர் கதையின் நாயகன், படத்தின் ஆரம்பத்திலேயே தன் பூனை இறந்ததை நினைத்து கண்ணீர் விட, அன்று இரவே ஒன் விஷ் வேலி என்ற பொருளை வாங்குகிறார். அதை தொடர்ந்து தன் நண்பர்களுடன் பார்-க்கு செல்கிறார்.

அங்கிருந்து வீட்டிற்கு செல்லும் போது தனக்கு பிடித்த பெண் நிக்கி-யுடன் அவர் வீட்டிற்கு சென்று ட்ராப் செய்கிறார், அப்போது தெரியாமல் நிக்கியை கிண்டல் செய்ய அவர் கோபமாகிறார்.

Obsession திரை விமர்சனம் | Obsession Movie Review

பிறகு அவரிடம் மன்னிப்பு கேட்டு, தான் வாங்கிய ஒன் டைம் விஷ் பொருளை உடைத்து ஒன்றை சொல்ல, நிக்கி உடனே பியரிடம் ஜாலியாக பேச ஆரம்பிக்கிறார். அப்படியே பியர் வீட்டிற்கு வந்து நிக்கி செட்டில் ஆக, அவர் விசித்திரமாக சில வேலைகளை செய்ய பியர் தினமும் அதிர்ச்சியில் உறைகிறார். நிக்கி ஏன் இப்படி செய்கிறார், இவருக்கு என்ன ஆனது என்பதன் மர்மங்களே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

பெரிய நடிகர், நடிகை இல்லாமல் இயக்குனர் கேரி தன் கதையை மட்டுமே நம்பி ஒரு ஹிட் படத்தை கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த பியர் மற்றும் நிக்கி மிரட்டல் பெர்ப்பாமன்ஸ், தன் காதலிக்கு என்ன ஆகிறது திடிரென இப்படி ஆகிறாரே என்று அவர் படும் பதட்டம் நம்மிடம் தொற்றிகொள்கிறது.

அதே நேரத்தில் நிக்கி கதாபாத்திரம், படத்தை தூக்கி நிறுத்துவதே அது தான், படம் முழுவதும் எதோ ஸ்பிலிட் பெர்சானலிட்டி போல் அவர் தன் காதலை காட்டுமிடம், நடு இரவு சுவரின் மூலையில் நின்று கொண்டு கத்துவது என ஆடியன்ஸுக்கு தூக்கி வாரி போட வைக்கிறார்.

Obsession திரை விமர்சனம் | Obsession Movie Review

ஒன் விஷ் வில்லோ என்ற பேண்டசி கான்செப்ட்-யை ரியல் லைப் மனிதர்களோடடு யதார்த்தமாக பொருத்திய விதம் அருமை, அதே நேரத்தில் கிளைமேக்ஸ் நெருங்க பரபரப்பாக செல்லும் அடுத்து என்ன என்று இருக்கும் திரைக்கதையில் மிக நார்மலாகவே கொண்டுசென்று ஒரு வித வலியுடன் கிளைமேக்ஸ் முடித்தது எல்லோரும் ஏற்றுகொள்வார்களா இந்த படத்தை என்பதும் கேள்விகுறி தான்.

படத்தின் டெக்னிக்கல் ஒர்க் டாம் நாச் தான், ஒளிப்பதிவு அந்த இருளில் ஹீரோயினை காட்டிய விதம் மிரட்டல், அதே நேரத்தில் சவுண்ட் டிசைனிங் பல இடங்களில் திகில் கிளப்புகிறது.

க்ளாப்ஸ்

கதைக்களம் நடிகர், நடிகை பங்களிப்பு டெக்னிக்கல் ஒர்க்

பல்ப்ஸ்

மெதுவாகவே நகரும் திரைக்கதை இன்னமும் விறுவிறுப்பாக சென்று இருக்கலாம்.

மொத்தத்தில் இந்த Obsession ஹாரர் பட விரும்பிகளுக்கு ஒரு டைம் பாஸ் ஸ்னாக்ஸாக இருக்கும்.

3/5 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US