ஆக்டோபஸ் வெப் தொடர் எப்படி இருக்கிறது? X விமர்சனம்
Octopus web series X review: அர்ச்சனா ரவிச்சந்திரன் நடிப்பில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ஆக்டோபஸ் வெப் தொடரை பார்த்தவர்கள் X-ல் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். இந்த வெப் தொடர் எப்படி இருக்கிறது என்று அவர்களின் விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
ஆக்டோபஸ் வெப் தொடர்
கொரோனா அலைக்கு பின், ஓடிடி தளங்கள் மீது ரசிகர்களின் கவனம் அதிகமாக, தமிழில் இருந்து பல வெப் தொடர்கள் வெளியாகி வருகின்றன. விலங்கு, சூழல் 1 & 2, பேப்பர் ராக்கெட், வதந்தி 1 & 2 உள்ளிட்ட பல கதைக்களங்களில் வெளியான வெப் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில், நேற்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான தமிழ் வெப் தொடர்தான் ஆக்டோபஸ். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் இந்த வெப் தொடரில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் அஸ்வின் குமார், கலைவாணி, சரித்திரன், வினோத் ஆகியோர் இந்த வெப் தொடரில் நடித்துள்ளனர். 7 எபிசோடுகள் அடங்கிய இந்த வெப் தொடரை ஜெயச்சந்திரா ஹாஷ்மி இயக்கியுள்ளார்.
X-ல் ரசிகர்களின் விமர்சனம்
இந்நிலையில், ஆக்டோபஸ் வெப் தொடரை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை X தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இதில், "மிஸ்டரி த்ரில்லரான இந்த ஆக்டோபஸ் வெப் தொடரில் ட்விஸ்ட் சூப்பர், விஷுவல் சிறப்பு, ஆனால் லாஜிக் மிஸ்ஸிங். முதல் 3 எபிசோடுகளில் சில காட்சிகள் மீண்டும் மீண்டும் வருகின்றன, ஆனால் 3-வது எபிசோடின் இறுதியிலிருந்து கதை விறுவிறுப்படைகிறது. 5, 6 மற்றும் 7-வது எபிசோடுகள் நன்றாக உள்ளன; இதில் இறுதி எபிசோடுதான் சிறப்பம்சமாக அமைகிறது. ABOVE AVERAGE! மற்றும் A DECENT WATCH" என பெரும்பாலும் கூறியுள்ளனர்.
#OCTOPUS - Good Watch ⭐️ ⭐️ ⭐️ ✨ (3.5/5) Streaming: Zee5 Language: Tamil மலையாளத்தில் வெளியான #Sookshmadarshini படத்தை இந்த சீரிஸ் ஞாபகப்படுத்தும். குறிப்பாக அர்ச்சனா மற்றும் அவரைச் சுற்றியுள்ள கதாபாத்திரங்களின் வடிவமைப்பு அந்தப் படத்தை நினைவுபடுத்துகிறது. உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு இந்த சீரிஸ் ரொம்பவே பிடித்திருந்தது. முதல் இரண்டு எபிசோடுகள் கதைக்கான அடித்தளத்தை அமைக்க கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்கின்றன. அதனால் ஆரம்பத்தில் சற்று சலிப்பு ஏற்படுகிறது. ஆனால், ஆறாவது எபிசோடு வரை கதை எந்தத் திசையில் பயணிக்கிறது, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று நம்மால் எளிதாகக் கணிக்க முடியாத அளவுக்கு எழுத்து அமைந்திருக்கிறது. ஏழாவது எபிசோடில் வரும் ட்விஸ்ட் ஓரளவுக்குப் பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், அதைத் திரையில் கொண்டு வந்த விதம் நன்றாகவே இருந்தது. Casting தான் இந்த சீரிஸின் மிகப்பெரிய பலம். 👌🏻 ஆங்காங்கே லாஜிக் மீறல்கள் எட்டிப் பார்த்தாலும், ஒரு நல்ல டைம்பாஸ் த்ரில்லர் அனுபவத்தைக் கொடுக்கிறது. மிக்ஸ்டு ரிவ்யூக்கள் நிறைய பார்க்க முடிகிறது. ஒருவேளை மலையாளத்தில் வெளியானிருந்தால் ஆகா ஓஹோ வரவேற்பு கிடைத்திருக்குமோ என்னவோ… https://t.co/qHL6DBAAyn
— KUDALINGAM MUTHU (@KUDALINGAM49671) November 27, 2026
#Octopus - A Mystery Thriller Series. 7 Episodes with 3 Hrs runtime. Title Card Seq Idea & that visuals Nice. Epi3 End Twist Super. Logic flaws r thr & the final episode is not so impressive. Perf, Music, Engagement factor & decent twists work. Not Bad for a watch. ABOVE AVERAGE! https://t.co/W0Cn0ED3a7
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 27, 2026
#OCTOPUS – 3.25/5. A Crime Thriller Series Packed With Some Twists & Turns. Series Has 7 Episodes With An Overall Runtime Of 3 Hrs 10 Mins (Around 27 Mins Per Episode). Initially, It Feels Like A Regular Serial, But Slowly Transforms Into An Interesting Crime Thriller. First 3 Episodes Have Some Repetitive Scenes, But Things Pick Up Towards The End Of Episode 3. Episodes 5, 6 & 7 Are Good, With The Final Episode Being The Biggest Highlight. Perfect Casting & All The Actors Have Delivered Good Performances. However, There Are Some Logical Mistakes & The Making Could Have Been Better. Short Runtime, Crime Thriller Genre & Some Unexpected Twists Make This A DECENT WATCH. A Perfect Weekend Watch For Some Timepass...🤝 One Important Suggestion: If You Plan To Watch This Series, DON'T ASK ANYONE ABOUT THE STORY OR TWISTS. Knowing The Twists Beforehand Might Spoil The Experience. Go In Blind And Enjoy The Series...
— Trendswood (@Trendswoodcom) November 27, 2026
#OCTOPUS — “ 0 ” LOGIC BUT LAST 2 EPISODES & BUT TWIST TRIED TO SAVE😬👀 AVERAGE WATCH! BEEN BETTER!! https://t.co/k4VJmLxlqX
— Saloon Kada Shanmugam (@saloon_kada) November 27, 2026