விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜனநாயகன்
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம், பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருப்பவர் நடிகர் விஜய்.
இவரது பட ரிலீஸ் என்றாலே அனைவரும் போட்டிபோட்டு படத்தை வாங்குவார்கள், அந்த அளவிற்கு லாபம் கொடுக்கும். தனது திரைப்பயணத்தில் கடைசியாக எச். வினோத் இயக்கத்தில் விஜய் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
வரும் ஜனவரி 9ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது, இதில் விஜய்யை தாண்டி பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

2வது சிங்கிள்
இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான தளபதி கச்சேரி பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.
அதன்பின் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் வருகிற டிசம்பர் 27ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் 2வது சிங்கிள் வரும் டிசம்பர் 18ம் தேதி வெளியாக இருப்பதாக அனிருத் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.