பவன் கல்யாணின் OG திரைப்படம் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
OG
தெலுங்கு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் OG. சுஜித் இயக்கிய இப்படத்தில் முன்னணி நடிகர் பவன் கல்யாண் நடித்திருந்தார்.
இவருடன் இணைந்து பிரியங்கா மோகன், இம்ரான் ஹாஷ்மி, அர்ஜுன் தாஸ், ராவ் ரமேஷ், ஸ்ரீயா ரெட்டி என பலரும் நடித்திருந்தனர்.
பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், கலவையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது.

எப்போது தெரியுமா?
இந்நிலையில், தற்போது இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, அக்டோபர் 23ந் தேதி முதல் OTT-யில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri