OG திரை விமர்சனம்
தெலுங்கு சினிமாவில் நீண்ட நாட்களாக ஒரு மெகா ஹிட் படத்திற்காக காத்திருக்கும் பவன் கல்யாணுக்கு அவருடைய ரசிகர் சுஜித் இயக்கத்திலேயே அமைந்த இந்த OG அந்த வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
ஜப்பானில் சாமுராய்களை ஒரு கேங் அழிக்க, அதில் பயிற்சி பெற்ற ஒரு சிறுவன் மட்டும் அங்கிருந்து தப்பிக்க, சில வருடம் கழித்து மும்பையில் பிரகாஷ்ராஜ் கேங் மும்பையில் ஒரு கண்டெயினர் ஒன்றை எடுத்து செல்ல, அதை ஒரு கும்பல் கைப்பற்ற வர, அந்த நேரத்தில் ஜப்பானிலிருந்து வந்த அந்த சிறுவன் பிரகாஷ் ராஜ் காப்பாற்ற, பிரகாஷ் ராஜ் அந்த சிறுவனை வளக்கிறார். அந்த சிறுவன் தான் கம்பீரா(பவன் கல்யாண்).
இந்த சண்டை எல்லாம் வேண்டாம் என்று மதுரை பக்கம் பவன் கல்யாண் வர, அந்த நேரத்தில் பிரகாஷ் ராஜ் மகனை ஜிம்மி என்பவர் கொல்கிறார்.
ஜிம்மி இந்தியாவின் பெரும்புள்ளியின் மகன். ஜிம்மிக்கு பிரகாஷ் ராஜ் மறைத்து வைத்துள்ள கண்டெய்னர் தேவை, அதற்காக அவரை கொல்ல வர, அந்த இடத்தில் பவன் கல்யாண் மனைவி ப்ரியங்கா மோகனை ஜிம்மி கொல்கிறார்.
பிறகு என்ன ஒதுங்கியிருந்த தன் கேங்ஸ்டர் உலகத்திற்குள் கம்பீர நுழைய, அதன் பிறகு பல வில்லன்கள் களத்தில் இறங்க, கம்பீரா இதையெல்லாம் எப்படி முறியடித்தார் என்ற மாஸ் அதகளமே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
பவன் கல்யாண் தன் ரசிகர்களுக்கு பல வருடமாக பசியில் காத்திருந்தவர்களுக்கு அறுசுவை விருந்து வைத்துள்ளார், OG கம்பீரா என்ற கதாபத்திரத்தில் ஒன் மேன் ஷோ காட்டியுள்ளனார், அவர் இறங்கினாலே எதிரிகள் என்ற யாரும் இருக்கமாட்டார்கள் போன்ற பில்டப் காட்சிகள் செம மாஸ் ஆக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
அதே நேரத்தில் மனைவி இறந்தாலும் சரி, மகளை கடத்தினாலும் சரி பெரிய ரியாக்ஸன் இல்லாமல் இருப்பது கொஞ்சம் ஓவர் தான் பாஸ். ப்ரியங்கா மோகன் வெறும் ஒரு பாடல் 4 காட்சிகள் வருகிறார், பெரிய கதாபாத்திரம் இல்லை.
வில்லனாக் வரும் இம்ரான் ஹஸ்மி, தன் தம்பி ஜிம்மி கொலைக்கு பழி வாங்க வருகிறார், அவரும் எதோ பேஷன் ஷோ போல் நடக்கிறார், கூலிங் க்ளாஸ் மாட்டுகிறார், பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.
அர்ஜுன் தாஸ் கதாபாத்திரம் ஆரம்பத்தில் நெகட்டிவ் ஆக சென்றாலும், கிளைமேக்ஸ் அவர் உண்மை தெரிந்து செய்யும் வேலை ஒன்று அவருக்கும் மாஸ் ஏறுகிறது. ஆனால், இது தான் நடக்கும் என ஆடியன்ஸுகே தெரியும்படியான கதாபாத்திர வடிவமைப்பு.
படத்தில் லாஜிக் என்பதை நூல் அளவு கூட எதிர்ப்பர்த்து விடாதீர்கள், ஒன்லி பவன் கல்யாண் மேஜிக் தான், படம் முழுவதும் இரத்த ஆறு ஓடுகிறது, அதற்கே தனி பட்ஜெட் செலவு ஆகிருக்கும் போல.
அதே நேரத்தில் பவன் கல்யாணுக்கு மாஸ் ஏற்றுகிறீர்கள் ஓகே சுஜித், ஆனால், கதை என்பதை இன்னும் கொஞ்சம் யோசித்து இருக்கலாம், 10,15 சண்டை காட்சிகள் மட்டும் வைத்து பில்டப் வசனங்களுடன், கொஞ்சம் கைதட்டலுக்கு சாஹோ யுனிவர்ஸை சொருகி, கிளைமேக்ஸில் பவன் கல்யாண் பழைய நாஸ்டாலஜி படங்கள் ரெபரன்ஸ் வைத்து தப்பித்துள்ளனர்.
படத்தை மிகப்பெரிய அளவில் தாங்கி பிடிப்பது தமன் இசை தான், மனுஷன் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார், காட்சிகளை பல மடங்கு மேல கொண்டு செல்வது தமன் இசை, ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு தான்.
க்ளாப்ஸ்
பவன் கல்யாண்
படத்தின் முதல் பாதி
பவன் கல்யான் நாஸ்டாலஜி விஷயங்கள்.
பின்னணி இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்
பல்ப்ஸ்
இரண்டாம் பாதியாவது கொஞ்சம் கதை என்று ஏதாவது இருந்திருக்கலாம்.
லாஜிக் ஓட்டை இருக்கலாம், ஆனால் அந்த ஓட்டையிலே முழுப்படமும் இருக்க கூடாது.