மூன்று நாட்களில் OG படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
OG
பவன் கல்யாண் நடிப்பில் கடந்த 25ஆம் தேதி திரைக்கு வந்த படம் OG. இப்படத்தை இயக்குநர் சுஜித் இயக்க DVV நிறுவனம் தயாரித்திருந்தது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.
முதல் முறையாக பவன் கல்யாணுடன் இணைந்து பிரியங்கா மோகன் ஜோடியாக நடித்திருந்தார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடித்திருந்தனர்.
மூன்று நாள் வசூல்
ரசிகர்களால் மாபெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த OG திரைப்படம் முதல் நாள் உலகளவில் வசூலில் சாதனை படைத்தது. ஆனால், இரண்டாவது நாளே சரிவை சந்தித்தது. சரி, மூன்று நாட்கள் முடிவு மொத்தமாக உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்க்கலாம்.
இதுவரை மூன்று நாட்களில் உலகளவில் பவன் கல்யாணின் OG திரைப்படம் ரூ. 220 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.