மீனாட்சி பொண்ணுங்க தொடரை தொடர்ந்து ஜீ தமிழில் முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா?
ஜீ தமிழ்
எந்த துறை எடுத்துக்கொண்டாலும் அதில் போட்டி கண்டிப்பாக இருக்கும்.
அப்படி கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தொலைக்காட்சிகளில் டிஆர்பியில் டாப்பில் வர அதிக சண்டை நடக்கிறது என்றே கூறலாம். அப்படி தமிழ் சின்னத்திரையில் சன் மற்றும் விஜய் டிவி இடையே கடும் போட்டி நடக்கிறது.
கடந்த சில வாரங்களாக இந்த தொலைக்காட்சிகளின் சீரியல்களின் டிஆர்பி மாறி மாறி வருகிறது.
முதல் இடத்தை பிடித்துவந்த சன் டிவி தொடர்களின் சாதனையை முறியடித்து விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை முதல் இடத்தை பிடித்து வருகிறது.
ஜீ தமிழ்
இந்த 2 தொலைக்காட்சியை தாண்டி போட்டியில் இருக்கும் டிவி என்றால் ஜீ தமிழ் தான். இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்.
சமீபத்தில் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிய மீனாட்சி பொண்ணுங்க தொடர் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் மற்றொரு சீரியல் முடிவுக்கு வருவது குறித்து தகவல் வந்துள்ளது.
அதாவது இளம் கலைஞர்கள் நடிக்க வெற்றிகரமாக ஓடிய இந்தியா தொடர் முடிவுக்கு வர இருக்கிறதாம்.