ஜனனி கதையை முடிக்க திட்டம்போட்ட தேவசகாயம்.. கொலை செய்ய துரத்தும் அடியாட்கள்! எதிர்நீச்சல் 2 சீரியல்
எதிர்நீச்சல் சீரியல்
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் 2 சீரியலில், தற்போது ஆலிவர் தேவசகாயம் ஜனனி எங்கு இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டு, அவரை கொலை செய்ய ஆட்களை அனுப்புகிறான்.

அதே சமயம், இந்த வலக்கை விசாரித்து வரும் போலீஸ், ஜனனிக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பி 'இவர் தானே நீங்கள் சொன்ன தேவசகாயம், இப்போது அவர் கொடைக்கானலில் இருக்கிறார், நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள்' என கூறுகிறார். இந்த விஷயத்தை கேட்டதும் சக்தி மற்றும் ஜனனி இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்.
கொலை செய்ய துரத்தும் அடியாட்கள்
அதற்குள், தேவசகாயத்தின் ஆட்கள் ஜனனி, சக்தி இருக்கும் காரை கண்டுபிடித்து அவர்களை துரத்துகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் சக்தி மற்றும் ஜனனி ஒரு பாட்டியின் வீட்டிற்குள் தஞ்சமடைகின்றனர். இதன்பின், ஜனனி கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்ட அந்த பாட்டி சத்துள்ள உணவுகளை கொடுத்து அவளை நன்றாக கவனித்துக்கொள்கிறார்.

மறுபக்கம் தேவசகாயம் தனது ஆட்களிடம், 'நாம் அவளை துரத்துகிறோம் என்கிற விஷயம் தற்போது அவளுக்கு தெரிந்திருக்கும், அவள் போலீஸிடம் இந்த தகவலை கொடுப்பதற்குள், அவள் கதையை முடித்துவிட வேண்டும். அவள் உயிரோடு இந்த மலையைவிட்டு இறங்கக்கூடாது' என தனது ஆட்களிடம் கூறுகிறார். இதன்பின் எதிர்நீச்சல் சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதன்பின், அந்த தேவசகாயத்தின் அடியாட்கள் பாட்டியின் வீட்டிற்கு வந்து, ஜனனி மற்றும் சக்தி குறித்து விசாரிக்கிறார்கள். ஆனால், அந்த பாட்டி சக்தி, ஜனனி குறித்து எதுவும் சொல்லாமல், அவர்களிடம் பேசி அனுப்பிவிட்டார். இதற்காக அந்த பாட்டிக்கு சக்தி தனது நன்றியை தெரிவித்துவிட்டு, அங்கிருந்து ஜனனி, சக்தி இருவரும் கிளம்புகிறார்கள். இந்த சமயத்தில் ஜனனி, சக்தி சென்ற காரை தேவசகாயத்தின் ஆட்கள் பார்த்துவிட்டு, அவர்களை துரத்துகிறார்கள். அடியாட்களிடம் இருந்து ஜனனி, சக்தி எப்படி தப்பிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.