Box Office: ஓம் திரைப்படம் ஒரு வாரத்தில் உலகளவில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Nov 27, 2026 03:00 AM GMT
Report

O.M movie 7 days box office: ஓம் திரைப்படம் வெளியாகி 7 நாட்கள், அதாவது ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

ஓம்: Operation Mole

தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி கடந்த நவம்பர் 20-ஆம் தேதி வெளியான திரைப்படம் ஓம்: Operation Mole. இப்படத்தை Wunderbar Films தயாரிக்க, சாய் பல்லவி, மம்மூட்டி, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

Box Office: ஓம் திரைப்படம் ஒரு வாரத்தில் உலகளவில் செய்துள்ள வசூல் | Om Movie 7 Days Box Office

தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் 20 தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான ஓம், எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்க, பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ளது.

ஆர்த்தி ரவி தொடர்ந்த அவதூறு வழக்கு... கெனிஷாவிற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

ஆர்த்தி ரவி தொடர்ந்த அவதூறு வழக்கு... கெனிஷாவிற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

ஒரு வார வசூல் விவரம்

ஓம் திரைப்படம் வெளியாகி 7 நாட்கள், அதாவது ஒரு வாரத்தை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்நிலையில், இப்படம் உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஓம் திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ. 113 கோடி வசூல் செய்துள்ளது. முதல் 3 நாட்களில் ரூ. 90+ கோடி வரை வசூலித்திருந்த இப்படம், அடுத்த 4 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Box Office: ஓம் திரைப்படம் ஒரு வாரத்தில் உலகளவில் செய்துள்ள வசூல் | Om Movie 7 Days Box Office

பொறுப்பு துறப்பு: ஓம் திரைப்படத்தின் ஒரு வாரம் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல; நம் சினி உலகம் தரப்பில் இருந்து Track செய்யப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US