பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல்
O.M movie pre booking collection: தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இப்படத்தின் முன்பதிவு தொடங்கி அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
ஓம்
அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஓம் (O.M: Operation Mole). தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மம்மூட்டி வில்லனாக நடித்துள்ளார். 8 ஆண்டுகளுக்கு பின் அவர் தமிழில் நடிக்கும் திரைப்படம் இதுவே ஆகும்.

மேலும், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ், நஸீருத்தீன் ஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

திருவண்ணாமலை, திருப்பதி ஆகிய இரண்டு கோயில் நகரங்களுக்கு இடையே நடக்கும் விஷயம்தான் இந்த கதை. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் நாளை உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
முன்பதிவு வசூல் விவரம்
இந்த நிலையில், ஓம் திரைப்படத்தின் முன்பதிவு வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரையிலான முன்பதிவில் ரூ. 10+ கோடி வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக முதல் நாள் வசூல் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு: ஓம் திரைப்படத்தின் முன்பதிவு வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரபூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.