பாக்ஸ் ஆபிஸ்: 2 நாட்களில் தமிழ்நாட்டில் ஓ.ம் திரைப்படம் செய்துள்ள வசூல்
O.M Movie 2 days Tamil Nadu Box office: தமிழ்நாட்டில் தனுஷின் ஓ.ம் திரைப்படம் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
மாட்டிக்கொண்ட திருடன்.. முத்துவை கட்டிப்பிடித்து அழுத மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்
ஓ.ம்
மெகா ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் மம்மூட்டி 8 ஆண்டுகளுக்கு பின் தமிழில் நடித்துள்ள திரைப்படம் ஓ.ம். கடைசியாக ராம் இயக்கத்தில் வெளியான பேரன்பு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின், இவர் நடிக்கும் தமிழ் திரைப்படம் ஓ.ம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து தனுஷ், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான ஓ.ம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், ஓ.ம் திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் விவரம் வெளியாகியுள்ளது. இப்படம் ரிலீஸாகி 2 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் ரூ. 17 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பொறுப்பு துறப்பு: ஓ.ம் திரைப்படத்தின் 2 நாட்கள் தமிழ்நாடு வசூல் விவரம் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.