பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Nov 22, 2026 03:02 AM GMT
Report

O.M Movie worldwide 2 days Box office: ஓம் திரைப்படம் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. தனுஷ், சாய் பல்லவி, மம்மூட்டி என மூன்று உச்ச நட்சத்திரங்கள் முதல் முறையாக இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த மாதமே இப்படம் வெளியாகவிருந்த நிலையில், ஜெயிலர் 2 ரிலீஸின் காரணமாக நவம்பர் 2-ஆம் தேதிக்கு தள்ளிப்போனது. இந்த நிலையில், இப்படம் வெளியாகி 2 நாட்கள் ஆகிறது; இப்போது வரை இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

தனியாக வந்த சங்கீதா.. அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வீடியோ

தனியாக வந்த சங்கீதா.. அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வீடியோ

நடிகர் தனுஷ்

தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி இன்று உலக அளவில் தன்னுடைய புகழை பரப்பியுள்ளார். அதுவும் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர்கள் russo brothers இயக்கத்தில், தி Grey Man என்கிற திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக நடித்து மாஸ் காட்டினார்.

பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல் | Om Movie Worldwide 2 Days Box Office

நடிப்பை தாண்டி கடந்த சில ஆண்டுகளாக இயக்குநராகவும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ராயன், இட்லி கடை ஆகிய படங்களை இயக்கினார். அதன்பின், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கர திரைப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. என்னடா இது, தனுஷ் ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டதே என ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர். அப்படி காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்த திரைப்படம் ஓ.ம்.

ஓ.ம்

அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, மம்மூட்டி, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்து கடந்த நவம்பர் 20ஆம் தேதி வெளியான திரைப்படம் ஓ.ம். இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால், இப்படம் அவர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. இதனால், கலவையான விமர்சனங்களை ஓ.ம் திரைப்படம் எதிர்கொண்டு வருகிறது. ஆனால், சாய் பல்லவியின் நடிப்பிற்கும் அவருடைய கதாபாத்திரத்திற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல் | Om Movie Worldwide 2 Days Box Office

2 நாட்கள் வசூல் விவரம்

இந்நிலையில், ஓ.ம் திரைப்படம் உலகளவில் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளில் ரூ. 30+ கோடி வசூலித்திருந்த நிலையில், இரண்டாவது நாளில் ரூ. 20 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது. முதல் நாளை ஒப்பிடும் போது இரண்டாவது நாளில் சற்று சரிவை சந்தித்திருக்கிறது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல் | Om Movie Worldwide 2 Days Box Office

பொறுப்பு துறப்பு: ஓ.ம் திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US