Box office: 5 நாட்களில் ஓ.ம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Nov 25, 2026 03:00 AM GMT
Report

O.M movie worldwide 5 days box office: தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஓ.ம்: Operation Mole திரைப்படம் 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இப்படத்தின் வசூல் குறித்து நாம் முதல் நாளிலிருந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், 5 நாட்களில் உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

ஓ.ம்: Operation Mole

ரங்கூன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இதை தொடர்ந்து இவர் இயக்கிய அமரன் திரைப்படம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இதன்பின், யாருடன் இவர் கைகோர்க்க போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில், தனுஷின் ஓ.ம் படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது.

Box office: 5 நாட்களில் ஓ.ம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Om Movie Worldwide 5 Days Box Office

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வளர்ந்து வரும் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஓ.ம் படமும் ஒன்று. ஆனால், அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. இதனால், பாக்ஸ் ஆபிஸில் சற்று பின்னடைவை சந்தித்து வருகிறது.

வீட்டை விற்ற நடிகை அனுஷ்கா ஷெட்டி? எத்தனை கோடி பாருங்க

வீட்டை விற்ற நடிகை அனுஷ்கா ஷெட்டி? எத்தனை கோடி பாருங்க

5 நாட்கள் வசூல்

ஓ.ம் திரைப்படத்தின் வசூல் விவரங்களை முதல் நாளிலிருந்தே நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில், 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் உலகளவில் ஓ.ம் திரைப்படம் ரூ. 105 கோடி வசூல் செய்துள்ளது. முதல் 3 நாட்களில் ரூ. 90+ கோடி வசூல் செய்திருந்த இப்படம், அடுத்த 2 நாட்களில் ரூ. 15 கோடி வரை மட்டுமே வசூலித்து, மிகப்பெரிய பின்னடைவை பாக்ஸ் ஆபிஸில் சந்தித்திருக்கிறது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Box office: 5 நாட்களில் ஓ.ம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Om Movie Worldwide 5 Days Box Office

பொறுப்பு துறப்பு: ஓ.ம் திரைப்படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல. இவை நம் சினி உலகம் தரப்பில் Track செய்யப்பட்டு எடுக்கப்பட்ட வசூல் விவரங்களே என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US