Box Office: ஓம் திரைப்படம் உலகளவில் 8 நாட்களில் செய்துள்ள வசூல்
O.M movie worldwide 8 days box office: ஓம் திரைப்படம் 8 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
ஓம்: Operation Mole
தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி பெரிதும் எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஓம்: Operation Mole. இப்படத்தின் மூலம் நடிகர் மம்மூட்டி 8 ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். மேலும், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால், அவர்களுடைய எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் ஓம் திரைப்படத்திற்கு கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.
8 நாட்கள் வசூல்
ஓம் திரைப்படம் 8 நாட்களை கடந்திருக்கும் நிலையில், இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 நாட்களில் உலகளவில் ஓம் திரைப்படம் ரூ. 117 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பொறுப்பு துறப்பு: ஓம் திரைப்படத்தின் 8 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல; நம் சினி உலகம் தரப்பில் Track செய்யப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.