ஓம்: Operation Mole திரை விமர்சனம்

Report

O.M: Operation mole movie review: அமரன் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ஓம்: Operation Mole. திருவண்ணாமலை, திருப்பதி ஆகிய இரண்டு கோயில் நகரங்களுக்கு இடையே நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்புடன் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ஓம் திரைப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்ப்போம்.

ஓம்: Operation Mole திரை விமர்சனம் | Om Operation Mole Movie Review

கதைக்களம்

தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் நடக்கும் செம்மர கடத்தலை தடுத்து, அதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்கிற நோக்கத்துடன் செயல்படும் போலீஸ் அதிகாரியாக என்ட்ரி கொடுக்கிறார் நித்யா ரெட்டி (சாய் பல்லவி). இந்த செம்மர கடத்தலில் தனது தந்தையையும், கணவரையும் அவர் இழந்திருக்கிறார்.

செம்மர கடத்தலை தடுக்க Joint Task Force அமைக்கப்பட்டு இருந்தாலும், அதில் ஈடுபடும் கார்த்திகேயன் (மம்மூட்டி) கேங் உள்ளே நம் ஆள் ஒருவர் இருக்க வேண்டும் என முடிவு எடுத்து, Under cover agent-ஆக திருக்குமரனை (தனுஷ்) அனுப்புகின்றனர். Photographer-ஆக செல்லும் அவர், படிப்படியாக மம்மூட்டியிடம் நெருக்கமாகி, ஒரு கட்டத்தில் அவரின் வலது கையாக மாறிவிடுகிறார்.

ஓம்: Operation Mole திரை விமர்சனம் | Om Operation Mole Movie Review

தனுஷை தன்னுடைய நிழலாக பார்க்கும் மம்மூட்டி, தன்னிடம் உள்ள 1000 டன் செம்மரங்களை எப்படியாவது கைமாற்றிவிட்டு இந்த தொழிலை விட்டு சென்றுவிட வேண்டும் என நினைக்க, அதற்கு தனுஷ் திட்டம் போடுகிறார். முதலில் 300 டன் செம்மரங்களை துபாயில் உள்ள அப்துலுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

மம்மூட்டியின் இந்த வேலை அவருக்கு பிடித்துப்போக, உடனே மீதமுள்ள 700 டன்னையும் அனுப்ப சொல்கிறார். ஆனால், இந்த முறை சாய் பல்லவி தலைமையிலான அதிரடி படை 700 டன் செம்மரங்களை கைப்பற்றி விடுகிறது. அதோடு, இந்த கடத்தலில் இடம்பெற்றுள்ள அப்துலின் மகன், ரெட்டி உள்ளிட்டோரை கைது செய்துவிடுகிறது. இதில், மம்மூட்டி தப்பித்துவிடுகிறார். அதிரடி படை செம்மரங்களை பிடிக்கும்போது நடந்த துப்பாக்கி சூட்டில் தனுஷே இறந்து போயிருப்பார்; ஆனால், மம்மூட்டி அவரின் உயிரை காப்பாற்றிவிடுகிறார்.

ஓம்: Operation Mole திரை விமர்சனம் | Om Operation Mole Movie Review

இப்படி பரபரப்பான சூழல் ஒரு பக்கம் போய் கொண்டிருக்க, தனுஷின் தந்தை ஆந்திர எல்லையில் லாரி ஓட்ட சென்றிருக்கிறார். அப்போது அங்கு அவரை பார்க்கும் ஆந்திர காவல்துறை, அவர் செம்மரங்களை கடத்த வந்துள்ளார் என கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் செம்மரங்களை வெட்ட வந்த கூலி தொழிலாளிகளுடன் சேர்த்து தனுஷின் தந்தையை சுட்டு கொன்று விடுகிறது.

நீதியை கடைபிடிக்க வேண்டிய சட்டமே தனது தந்தையின் உயிரை பறித்துவிட்டது; இதனால் தனுஷ் எடுத்த முடிவு என்ன? தந்தையின் மரணத்திற்கு பலி வாங்கினாரா? செம்மர கடத்தலில் ஈடுபட்ட பெரிய புள்ளிகளை சாய் பல்லவி பிடித்தாரா இல்லையா? தனது கூட்டத்திற்குள் ஊடுருவும் போலீஸ் தனுஷ் என்பதை மம்மூட்டி கண்டறிந்தாரா? இறுதியில் நடந்தது என்ன? என பல கேள்விகளுக்கு விடையளிப்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

2015-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில், ஆந்திர பிரதேச செம்மர கடத்தல் தடுப்பு சிறப்பு அதிரடி படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழகத்தை சேர்ந்த 20 கூலி தொழிலாளர்கள் சுட்டுக் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தை மையமாக வைத்து, அதை சுற்றி கதாபாத்திரங்களை வடிவமைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் மிகவும் எமோஷனலாக நம்மை கலங்கடிக்கிறது. குறிப்பாக இடைவேளை காட்சியில் தனுஷின் தந்தையாக வரும் நடிகர் இந்திரன்ஸ் மற்றும் கூலி தொழிலாளர்கள் படுகொலை செய்யப்படும்போது நெஞ்சம் வலிக்கிறது. அதில் நடித்த நடிகர்களின் performance யதார்த்தத்தை வெளிப்படுத்த மிகவும் எமோஷனலாக இருந்தது.

ஓம்: Operation Mole திரை விமர்சனம் | Om Operation Mole Movie Review

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை தனுஷ் - சாய் பல்லவி - மம்மூட்டி ஆகிய மூவரின் கதாபாத்திரங்களை வைத்து திரைக்கதையை வடிவமைத்த விதம் சிறப்பு. தனுஷ் வழக்கம் போல், தன்னால் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க முடியும் என நிரூபித்துவிட்டார். அதிலும் இடைவேளை காட்சி, அதன்பின் தந்தையின் சடலத்தை கையில் ஏந்தும் காட்சியில் நம்மை கலங்கடித்துவிட்டார்.

சாய் பல்லவி படத்தின் மிகப்பெரிய தூண் என்றுதான் சொல்ல வேண்டும். தனுஷ் - மம்மூட்டி என இரு ராட்சச நடிகர்கள் இருக்கும்போது, அவர்களை மிஞ்சும் அளவிற்கு நடித்துள்ளார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு கம்பீரமான, நேர்மையான அதிகாரி இப்படித்தான் தன்னுடைய நாட்டிற்கும், மாநிலத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்பதை அழகாக திரையில் காட்டியுள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் வேற லெவல். தனுஷின் சண்டை காட்சிகளை விட, சாய் பல்லவியின் சண்டை காட்சிகள் மிகவும் சிறப்பாக இருந்தது.

ஓம்: Operation Mole திரை விமர்சனம் | Om Operation Mole Movie Review

நடிப்பிற்கு இலக்கணம் என்று நாம் பார்க்கும் ஒருசில நடிகர்களில் முக்கியமான ஒருவர் மம்மூட்டி. பேரன்பு திரைப்படத்திற்கு பின் 8 ஆண்டுகள் கழித்து தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார். மாஸ் என்பதை தாண்டி தன்னுடைய கதாபாத்திரத்தின் எமோஷனை வெளிப்படுத்தி அனைவரையும் கலங்க வைக்கிறார். நடிப்பில் பல சாதனைகளை படைத்த இவருக்கு, அது ஒன்றும் பெரிய விஷயமல்ல; ஆனால் இந்த கார்த்திகேயன் என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த விதம் சிறப்பாக உள்ளது. என்ன, இன்னும் கொஞ்சம் இவருடைய கதாபாத்திரத்தில் ஆழமும், வலுவும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தோன்றியது.

ஓம்: Operation Mole திரை விமர்சனம் | Om Operation Mole Movie Review

ஸ்ரீலீலா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை திரையில் அழகாக சுமந்து சென்ற விதம் சிறப்பு. நடனத்தை தாண்டி தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என காட்டியுள்ளார். நஸிரீதின் ஷா கதாபாத்திரமும் பெரிதாக ஒன்றும் இல்லை.

கதாபாத்திரங்களுக்கு இடையேயான எமோஷன், அதற்குள் உண்மை சம்பவங்களை பிணைத்த விதம், பணக்கார முதலாளிகளின் ஆசைக்காகவும், பணத்திற்காகவும், தங்களுடைய வாழ்க்கையை பணயம் வைக்கும் கூலி தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தின் வேதனையை காட்டிய விதம் என திரைக்கதை சிறப்பாக இருந்தது. ஆனால், படத்தின் நீளம் சற்று சோர்வையும், சலிப்பையும் ஏற்படுத்துகிறது. மேலும், எடிட்டிங் பல இடங்களில் நன்றாக இருந்தாலும், சில இடங்களில் கட் செய்யப்பட்ட விதம் நன்றாக இல்லை. அது அப்பட்டமாக தெரிகிறது. மேலும், சாய் பல்லவியின் சண்டை காட்சிகளில் இருந்த சுவாரஸ்யமும் நேர்த்தியும், தனுஷின் சண்டை காட்சியில் மிஸ்ஸிங். குறிப்பாக காட்டிற்குள் நடக்கும் சண்டை காட்சி, சாய் அப்யங்கரின் பாடல் மூலம் மாஸாக இருந்தாலும், நேர்த்தியாக இல்லை.

ஓம்: Operation Mole திரை விமர்சனம் | Om Operation Mole Movie Review

படத்தின் மற்றொரு ஹீரோ சாய் அப்யங்கர். ஒவ்வொரு காட்சியிலும் தனது பின்னணி இசையால் செதுக்கியுள்ளார். ஒளிப்பதிவு படத்திற்கு பலம். மற்ற தொழில்நுட்ப வேலைகள் அனைத்தும் படத்தை உயர்த்தி பிடிக்கிறது.

பிளஸ் பாயிண்ட்ஸ்

  • தனுஷ், மம்மூட்டி
  • சாய் பல்லவியின் அதிரடி performance
  • இடைவேளை,  கிளைமாக்ஸ்
  • எமோஷனல் காட்சிகள்
  • பாடல்கள் மற்றும் பின்னணி இசை
  • கதாபாத்திரங்களின் எமோஷனோடு, உண்மை சம்பவங்களை இணைத்த விதம்.

மைனஸ் பாயிண்ட்ஸ்

  • படத்தின் நீளம், குறிப்பாக இரண்டாம் பாதி இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம்.
  • தனுஷின் சண்டை காட்சியில் மிஸ்ஸாகும் நேர்த்தி

மொத்தத்தில், ஓம் எமோஷன் இருந்தாலும் ஆக்ஷன் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. கண்டிப்பாக அனைவரும் பார்க்கலாம். ஆனால், இது தனுஷின் கம்பேக் இல்லை. 

ஓம்: Operation Mole திரை விமர்சனம் | Om Operation Mole Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US