பாக்ஸ் ஆபிஸ்: ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் 2 நாள் வசூல் விவரம்
கடந்த 28-ஆம் தேதி வெளியான ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் 2 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்ஸ் மோர்
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி இன்று ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்கிறார் அர்ஜுன் தாஸ். இவர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஒன்ஸ் மோர்.

இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் பேமிலி போன்ற திரைப்படங்களை தயாரித்த Million Dollar Studios நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

பெரிதும் எதிர்பார்ப்புடன் கடந்த 28-ஆம் தேதி வெளியான ஒன்ஸ் மோர் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், ஒன்ஸ் மோர் திரைப்படம் உலகளவில் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 2 நாட்களில் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
