Once More: திரை விமர்சனம்

By Tony Aug 28, 2026 09:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இந்த வருடம் Romcom சீசன் போல, அந்த வகையில் ஏற்கனவே பாடல்கள் எல்லாம் செம ஹிட் ஆகி ரசிகர்கள் குறிப்பாக ஜென் சி இளைஞர்களை குறிவைத்து வந்துள்ள இந்த ஒன்ஸ் மோர் எப்படியுள்ளது? பார்ப்போம்.

Once More: திரை விமர்சனம் | Once More Movie Review

கதைக்களம்

அர்ஜுன் தாஸ் காதல் தோல்வியால் எப்போதும் சோக நிறைந்த முகத்துடன் மார்டன் டே தேவதாஸ் ஆக சுற்றி வருகிறார். இந்த நிலையில் ஒரு நாள அவர் பைக் பிரச்சனையால், பஸ் ஸ்டாப்பில் இருக்க, அங்கு அதிதி வந்து தான் உன் கல்லூரியின் ஜுனியர் என அறிமுகமாகிறார்.

அவர் அறிமுகமான சில நிமிடங்களிலேயே காதலை சொல்ல, அர்ஜுன் தாஸ் முடிந்தால் வீட்டுக்கு பையன் கேட்டு வா என சொல்ல, அவரும் அடுத்த நாளே வருகிறார்.

Once More: திரை விமர்சனம் | Once More Movie Review

இதை தொடர்ந்து இருவரும் டேட் செய்ய, இந்த டேட்-ல் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதல் சிறு மோதல் என செல்ல, ஒரு கட்டத்தில் அர்ஜுன் தாஸுக்கு அதிதி தான் சரி என தோன்றி திருமணத்துக்கு ஓகே சொல்கிறார்.

எல்லோரும் சந்தோஷமாக நிச்சயாதார்த்த வரவேற்பில் இருக்க, அர்ஜுன் தாஸ் பழைய காதலி அப்போது போன் செய்து, உன்னை இரவு பார்க்க வேண்டும் என சொல்ல, அர்ஜுன் தாஸ் பெரிய குழப்பமான இடத்திற்கு செல்ல பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

Once More: திரை விமர்சனம் | Once More Movie Review

படத்தை பற்றிய அலசல்

அர்ஜுன் தாஸ் அவருக்கே உரித்தான கதாபாத்திரம், முதல் பாதி முழுவதும் சிரிப்பு என்ன விலை என இறுக்கமான முகத்துடன் காதல் தோல்வியால் சோகமாகவே வளம் வருகிறார், அப்படியே தன் கல்லூரி காலத்தில் கலகலப்பாக இருக்க, அவரின் இந்த சோகத்தின் காரணம், அதனால் அவர் கடந்த வலி என அர்ஜுஜ் தாஸ் படம் முழுவதுமே சிறப்பாக நடித்துள்ளார்.

அதிதி டிபிக்கள் மணிரத்னம் படம் ஹீரோயினாகவே இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதியுள்ளார், துறுதுறு பெண்ணாக அர்ஜுன் தாஸுகாக அவர் செய்யும் விஷயங்கள், வசனங்கள் எல்லாம் கியூட் தான், படத்திலேயே சந்தோஷ் சுப்ரமணியம் படத்திலிருந்து வந்த மாதிரி என ஒரு வசனம் வைத்து அவர்களே நக்கல் செய்துள்ளனர்.

Once More: திரை விமர்சனம் | Once More Movie Review

ஹாய்: திரை விமர்சனம்

ஹாய்: திரை விமர்சனம்

படத்தின் முதல் பாதி முழுவதும் அர்ஜுன் தாஸ் புது காதலில் எப்படி விழுகிறார் என்பதற்கு பெரிய அழுத்தமான காட்சிகள் என்று ஏதுமில்லை, சோகமாகவே இருக்கிறார், திடிரென ஒரு நாள் அதிதிக்கு ஓகே சொல்கிறார், அவருக்கு அதிதி அவருடைய வாழ்க்கையில் அங்கங்கே சிரிக்க வைக்கிறார் என்பதை தாண்டி நமக்கு இந்த காதல் மீது பெரிய தாக்கம் ஏதும் ஏற்படவில்லை.

படத்தின் இரண்டாம் பாதி ப்ளாஸ் பேக் காட்சிகள் பார்த்தவுடன் கேரளா பெண் சோனா மீது காதல், சரி இந்த காதல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்த்தால் அந்த பெண் கதாபாத்திரம் ஏன் சார் இப்படி என தான் கேட்க வைக்கிறது.

Once More: திரை விமர்சனம் | Once More Movie Review

படம் முழுவதுமே செயற்கை தனம் தான் நிரம்பி வழிகிறது, ஏன் இந்த காதல் எதற்கு இந்த பிரிவு அந்த பிரிவு ஆடியன்ஸை தாக்கினால் தானே கதைக்கும் தாக்கம் ஏற்படும், இதில் அந்த பெண் பேச ஆரம்பித்தாலே யம்மா உனக்கு என்ன தான் பிரச்சனை என ஆடியன்ஸே கத்த ஆரம்பித்து விடுகின்றனர். எந்த ஒரு அழுத்தமும் இல்லாமலே இரண்டாம் பாதி செல்கிறது.

டெக்னிக்கலாக பாடல்கள், பின்னணி இசை பிரமாதம், அது தான் படத்தின் மிகப்பெரிய பலம், ஒளிப்பதிவு சென்னை, கேரளாவை அத்தனை யதார்த்தமாக அழகாக காட்டியுள்ளனர்.

க்ளாப்ஸ்

அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர்

இசை, ஒளிப்பதிவு

பல்ப்ஸ்

கொஞ்சம் கூட அழுத்தமே இல்லாமல் பெரிய எமோஷனல் கனேக்ட் இல்லாத காட்சி அமைப்புக்கள்.

மொத்தத்தில் Once More வேண்டவே வேண்டாம். 

Once More: திரை விமர்சனம் | Once More Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US