ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்: திரை விமர்சனம்
பரத், அபிராமி நடிப்பில் வெளியாகியுள்ள 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
மனைவியின் மருத்துவ செலவுக்காக பணத்திற்காக அலைகிறார் ஆட்டோ ஓட்டும் ராஜா. திருநங்கையாக மாறிய மகனை டாக்டருக்கு படிக்க வைக்க போராடுகிறார் தூய்மை பணியாளர் சாவித்ரி.
சாதிதான் முக்கியம் என வாழும் தலைவாசல் விஜய் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பெரிய துரோகத்தை கண்டுபிடிக்கும் மதி.
இவர்கள் அனைவரையும் துப்பாக்கி ஒரு புள்ளியில் இணைகிறது. பின்னர் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
நான்கு பேரின் வாழ்க்கை சூழல்களையும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் துப்பாக்கி ஒன்றின் மூலம் இணைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் பிரசாத் முருகன்.
ஆரம்பத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் காண்பிக்கப்படும்போது ஏதோ சுவாரஸ்யமான கதைக்களத்தில் பயணிக்கப் போகிறோம் என்ற உணர்வு தோன்றுகிறது.
ஆனால் காட்சிகள் செல்ல செல்ல அழுத்தம் இல்லாத திரைக்கதையால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. அதேபோல் பல காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன.
குறிப்பாக, இரண்டாம் பாதியில் வரும் கல்லூரி போர்சன் அயற்சி. நடிப்பை பொறுத்தவரை பரத், தலைவாசல் விஜய், அபிராமி என அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர். பல இடங்களில் சீரியல் போல ஒளிப்பதிவு அமைத்துள்ளது நெருடல். பாடல்களும் அந்த அளவிற்கு ஈர்க்கவில்லை.
நான்கு பேரின் கதைகளில் அஞ்சலி நாயர் மற்றும் தலைவாசல் விஜய்யின் போர்சனில் வரும் திருப்பம் அருமை. துப்பாக்கி எப்படி ஒவ்வொருவரிடமும் போய் சேர்கிறது என்பதை காட்டிய விதம் சிறப்பு.
க்ளாப்ஸ்
நடிப்பு
கிளைமேக்ஸ் ட்விஸ்ட்
பல்ப்ஸ்
மேக்கிங்
அழுத்தமில்லாத திரைக்கதை
சுவாரஸ்யம் குறைந்த சில காட்சிகள்