பிக்பாஸ் 8ல் பணப்பெட்டி வந்ததும் கிளம்பும் ஐடியாவில் போட்டியாளர்..யார் அவர்?
பிக்பாஸ் 8
பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் 8.
இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ள நிலையில் தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, ரஞ்சித், ராணவ், ரயான், சௌந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா, மஞ்சரி ஆகிய 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
இவர்களில் யார் வெற்றிப் பெற போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
வாரா வாரமும் டபுள் எவிக்ஷன்களாக நடந்து வருகிறது.
முக்கிய டாஸ்க்
சில வாரங்களில் பிக்பாஸின் முக்கிய டாஸ்க் மணி டாஸ்க் வரப்போகிறது.
இத்தனை சீசன்களில் இதுவரை இந்த டாஸ்கில் கவின், கேப்ரியல்லா, அமுதவாணன், சிபி, பூர்ணிமா ஆகியோர் பணத்தை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்கள்.
இந்த 8வது சீசனில் ஜெஃப்ரி இதற்குள் ரஞ்சித் அவர்களிடம் எப்போது மணி டாஸ்க் என்று கேட்கிறார். அவர் 12 அல்லது 14வது வாரத்தில் வரும் என சொல்கிறார்.
திடீரென ஜெஃப்ரி இந்த கேள்வியை கேட்டுள்ளதால் ஒருவேளை பணத்தை எடுத்துக்கொண்ட செல்ல முடிவு செய்துள்ளாரோ என்று பேச்சு உள்ளது.