பிக்பாஸ் 5வது சீசனில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலம் யார் தெரியுமா?- அட இவரா?
பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது இருந்த பரபரப்பு இப்போது நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும் நேரத்தில் மக்களிடம் இல்லை என்று தான் கூற வேண்டும்.
நிகழ்ச்சியில் ஒரு விறுவிறுப்பு குறைவதாக மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு சின்ன பொண்ணு அல்லது அபிநய் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நேரத்தில் தான் அபிநய் வாங்கும் சம்பளம் குறித்து ஒரு தகவல் பரவி வருகிறது. விஜய் டிவியில் படு பிரபலமான முகமாக இருப்பவர் பிரியங்கா, அவருக்கே ஒரு வாரத்திற்கு ரூ 2 லட்சம் சம்பளம் எனப்படுகிறது.
அவரை விட அபிநய்க்கு ஒரு வாரத்திற்கு ரூ. 2.75 லட்சம் சம்பளம், அதாவது பிக்பாஸ் போட்டியாளர்களில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலம் இவர்தான் என கூறப்படுகிறது.