சக்திவேல் சீரியல் நாயகனை தொடர்ந்து வெளியேறியுள்ள முக்கிய நடிகை... அவருக்கு பதில் இனி இவர்தான், போட்டோ
விக்ரம்ஸ்ரீ
விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் முடிவுக்கு வந்த சீரியல் ஆஹா கல்யாணம்.
3 அக்கா-தங்கைகளின் திருமண வாழ்க்கையை மையப்படுத்திய ஒரு கதையாக அமைந்தது. வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் அண்மையில் முடிவுக்கு வந்தது.
ஆஹா கல்யாணம் சீரியலில் நாயகனாக நடித்து வந்தவர் விக்ரம்ஸ்ரீ, தற்போது இவர் விஜய் டிவியின் வேறொரு தொடரில் நாயகனாக களமிறங்கியுள்ளார். அதாவது சக்திவேல் தொடரில் இருந்து நாயகனாக நடித்துவந்த பிரவீன் ஆதித்யா விலக அவருக்கு பதில் விக்ரம்ஸ்ரீ நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ரோபோ ஷங்கர் நினைவாக பிரபல கோவிலுக்கு Robotic யானையை பரிசளித்த பிரபல சீரியல் நடிகர்... இந்திரஜா வெளியிட்ட வீடியோ
2வது மாற்றம்
வேலு தனது அண்ணனை கொலை செய்ததற்காக ஜெயிலுக்கு செல்கிறார், அதோடு முதல் சீசன் முடிவடைய 2வது சீசன் தொடங்குகிறது.
அதில் நாயகனாக விக்ரஸ்ரீ களமிறங்குவதாக நாம் ஏற்கெனவே அறிவித்த நிலையில் இப்போது அதே சீரியலில் இருந்து ஒரு நடிகை வெளியேறிய தகவல் வந்துள்ளது.
தேனு கதாபாத்திரத்தில் நடித்துவந்த சந்தியா சொந்த காரணங்களால் சீரியலில் இருந்து வெளியேறுகிறாராம். அவருக்கு பதில் தேனாக, சஹானா நடிக்க உள்ளாராம்.