பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா?
சீரியல்கள்
மக்களின் பொழுதுபோக்கு விஷயங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரைக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எனவே ஏகப்பட்ட சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும் களமிறங்குகிறது.
முடியும் தொடர்
விஜய் டிவியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் 2 சீரியல்கள் முடிவுக்கு வரப்போகிறது. ஒன்று 5 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தான்.
இப்போது கதையில் நிதிஷ் இறப்பின் கதைக்களம் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்னொரு பக்கம் தங்கமகள் சீரியலில் ராமசாமியின் இறப்பிற்கு காரணம் யார் என்பதுடன் தொடர் முடிவுக்கு வரப்போகிறது.
இந்த நிலையில் வேறொரு தொலைக்காட்சியில் முடிவுக்கு வரப்போகும் சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பவித்ரா சீரியல் ஆகஸ்ட் 2ம் தேதி முடிவுக்கு வரப்போகிறதாம்.