நினைத்தாலே இனிக்கும் சீரியலுக்கு பிறகு ஜீ தமிழில் முடிவுக்கு வரும் இன்னொரு தொடர்...
நினைத்தாலே இனிக்கும்
ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய சீரியல் நினைத்தாலே இனிக்கும்.
கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் கடந்த அக்டோபர் 25, 2025 முடிவுக்கு வந்தது. 1417 எபிசோடுகளோடு இந்த சீரியல் முடிவுக்கும் வந்தது.

குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
இத்தனை வருடம் இந்த சீரியலுக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்கள் தொடர் முடிவுக்கு வருகிறதே என கொஞ்சம் வருத்தம் அடைந்தார்கள்.
சீரியல் முடிவு
கடந்த சில நாட்களாக ஜீ தமிழில் பழைய சீரியல்கள் முடிவுக்கு வந்த வண்ணம் உள்ளது.
இதற்கு முன் நினைத்தாலே இனிக்கும், மாரி, கெட்டி மேளம் போன்ற சீரியல்கள் முடிவுக்கு வருவதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வந்தது.
இந்த நிலையில் நினைத்தாலே இனிக்கும் சீரியலை தொடர்ந்து மாரி தொடர் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.