இந்திய விமானப்படையில் பணியாற்றிய ஒரே ஒரு தமிழ் நடிகர்... யார் தெரியுமா?
விமானப்படை
இந்திய இராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமானப்படை என இந்தியாவில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
தற்போது இந்திய விமானப்படையில் பணியாற்றிய ஒரு தமிழ் நடிகர் குறித்த தரமான தகவல் தான் வெளியாகியுள்ளது. கடந்த 1964ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டு வரையிலான 10 வருடங்கள் தமிழ் சினிமா நடிகர் ஒருவர் இந்திய விமானப் படையில் பணியாற்றியுள்ளார்.
இதையடுத்து சினிமா மீது ஆர்வம் வந்ததால் தனது பணியை விட்டு, சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
யார் அவர்
இந்திய விமானப்படையில் பணியாற்றி ஒரே தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றவர் வேறுயாரும் இல்லை நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் தான்.
இவர் கடந்த 1976ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் பட்டிண பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
திரைப்படங்கள் மட்டுமின்றி, சின்னத்திரையிலும், பல குறும்படங்களிலும் நடித்துள்ள டெல்லி கணேஷ் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, தமிழக அரசால் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.