One year of லப்பர் பந்து: மக்கள் கொண்டாடிய இப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்று தெரியுமா
லப்பர் பந்து
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகி கடந்த ஆண்டு திரைக்கு வந்த படம் லப்பர் பந்து. இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா, சஞ்சனா, காளி வெங்கட், டிஎஸ்கே உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
அட்டகத்தி தினேஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த நடிகர் தினேஷ், இப்படம் வெளிவந்தபின் அனைவராலும் கெத்து தினேஷ் என அழைக்கப்பட்டு வருகிறார். அந்த அளவிற்கு இவருடைய திரை வாழ்க்கையில் மாபெரும் திருப்பு முனையாக இப்படம் அமைந்தது.
ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்க, படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் மனதை கவர்ந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி வெளிவந்த இப்படம் தமிழக மக்களால் கொண்டாடப்பட்டது.
கிரிக்கெட்டை வைத்து இப்படியொரு படமா, அதில் மிக முக்கியமான சமூக கருத்தை இயக்குநர் வைத்த விதம், காதல் காட்சிகள், நகைச்சுவைகள், திரைக்கதை என படத்தை பல வகையில் பாராட்டி தள்ளினார்கள்.
பாக்ஸ் ஆபீஸ்
இன்றுடன் இப்படம் வெளிவந்து ஓராண்டு ஆகியுள்ளது. இந்நிலையில், லப்பர் பந்து திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 65+ கோடி வசூல் செய்துள்ளது. லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய லாபத்தை கொடுத்ததாக திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.