மெய்யழகன் வெளிவந்து ஓராண்டு நிறைவு.. படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா
மெய்யழகன்
96 படத்தின் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்த இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி வெளிவந்த படம் மெய்யழகன். தலைப்புக்கு ஏற்றபடியே படம் மிகவும் அழகாக, அற்புதமாக இருந்தது.
ரசிகர்கள் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டாடினார்கள். சிலர் இப்படத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் தவறான விமர்சனங்களை முன் வைத்தனர். அதையெல்லாம் தாண்டி இப்படம் மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியது.
இப்படத்தில் கார்த்தி, அர்விந்த் சாமி, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ஓராண்டு நிறைவு
இன்றுடன் மெய்யழகன் படம் வெளிவந்து ஓராண்டு நிறைவு ஆகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். தயாரிப்பு நிறுவனம் 2டி ஓராண்டு நிறைவு குறித்து சிறப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
ஓராண்டை நிறைவு செய்திருக்கும் மெய்யழகன் படத்தின் வசூல் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா? கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற மெய்யழகன் படத்தின் மொத்த வசூல் ரூ. 50+ கோடி ஆகும்.