"ஒன்னா இருக்க கத்துக்கணும்".. விஜய் டிவியில் தொடங்கும் புது சீரியலின் ப்ரோமோ இதோ

By Parthiban A Jun 06, 2026 02:39 PM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் நடித்து வரும் நிரோஷா மற்றும் ஸ்டாலின் முத்து என இருவரும் மீண்டும் ஜோடியாக நடிக்கும் புது சீரியல் ஒன்றில் நடிக்கின்றனர்.

"ஒன்னா இருக்க கத்துக்கணும்" என கூட்டு குடும்ப கதையை மையப்படுத்தி தான் இந்த சீரியலின் கதையும் இருக்கிறது.

"ஒன்னா இருக்க கத்துக்கணும்".. விஜய் டிவியில் தொடங்கும் புது சீரியலின் ப்ரோமோ இதோ | Onna Irukka Kaththukkanum Vijay Tv New Serial

ப்ரோமோ 

லட்சுமி மெஸ் என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார் ஸ்டாலின், அவர் கடையில் வேலை செய்யும் எல்லோரையும் திட்டி திட்டி வேலை வாங்குவதை பார்த்து அங்கு வரும் லேபர் துறை அதிகாரி ஒருவருக்கு கடும் கோபம் வருகிறது. உடனே முதலாளி சரியாக சம்பளம் தருகிறாரா என விசாரிக்கிறார்.

அப்போது தான் அவர்கள் எல்லோருமே தனது குடும்பத்தினர் என அவர் கூறுகிறார்.

மேலும் கடைக்கு வேலை செய்ய வந்த பெண்ணையே தனது மகனுக்கும் திருமணம் செய்து வைத்து இருக்கிறார் அவர். ப்ரோமோவை பாருங்க. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US