முதல் நாளிலேயே பல கோடிகளை வாரி குவித்த நோலனின் ஓப்பன்ஹெய்மர்!.. எவ்ளோ தெரியுமா?
ஓப்பன்ஹெய்மர்
பிரபல ஹாலிவுட் இயக்குனரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு உலக மெங்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதிலும் இந்தியவில் நோலனுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
தற்போது கிறிஸ்டோபர் நோலன் இரண்டாம் உலக போர் சமயத்தில் நடந்த சம்பவங்களை வைத்து ஓப்பன்ஹெய்மர் என்ற படத்தை உருவாகியுள்ளார்.
இப்படத்தில் அணுகுண்டு வெடிக்கும் வைக்கும் காட்சிகள் எந்த ஒரு CG இல்லாமல் பட எடுத்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் அதிக அளவில் காணப்பட்டது.

வசூல்
இந்நிலையில் நேற்று வெளியான ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இந்தியாவில் முதல் நாளிலேயே இப்படம் ரூபாய் 16 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

திரிஷாவுடன் மட்டும் காமினேஷன் போட்டோஷூட்!..லியோ படக்குழுவை அறவே மதிக்காமல் சென்ற விஜய்!
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    