ஆஸ்கர் மேடையில் பெருமை சேர்க்கப்போகும் நடிகர் சூர்யா மற்றும் முக்கிய நடிகை- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
நடிகர் சூர்யா பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தாலும் தனக்கு என்று ஒரு அடையாளத்தை பெற்றுக்கொண்டவர். ஆரம்பத்தில் இவரும் பல தோல்விகளை சந்தித்துள்ளார்.
இப்படியே சென்றால் நிலைக்க முடியாது என முடிவெடுத்து சிக்ஸ் பேக் வைப்பது, தன்னை நிரூபிக்கக்கூடிய கதைகளை தேர்வு செய்து நடிப்பது என நடித்தார்.
இந்த வருடம் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் அவ்வளவாக வசூல் வேட்டை நடத்தவில்லை.
ஆஸ்கர் மேடையில் சூர்யா
ஆஸ்கர் விருது என்பது ஒவ்வொரு கலைஞனும் பிரம்மிப்பாக பார்க்கும் ஒரு விஷயம். சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கர் விருதிற்கு பக்கத்தில் சென்று மிஸ் செய்தது.
தற்போது என்னவென்றால் ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு வந்துள்ளது. ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற இருக்கிறார் சூர்யா.
397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடிகை மீனாவின் கணவருக்கு அப்படியொரு நோயா? இதனால் தான் இறந்தாரா?- வெளிவந்த விவரம்

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
