ஹாலிவுட்டில் ஒத்த செருப்பு..! பார்த்திபனின் புதிய முயற்சி.. ஹீரோ வில் ஸ்மித்?
ஒத்த செருப்பு Size 7
தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் ஒத்த செருப்பு Size 7. இப்படத்தை பார்த்திபன் இயக்கி நடித்திருந்தார்.
ஒரே ஒரு நபரின் கண்ணோட்டத்தில் நகரும் இப்படத்தை எந்த ஒரு இடத்திலும் தொய்வு இல்லாமல் திரைக்கதையில் அசத்தியிருந்தார் பார்த்திபன். அதுவே இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. திரையரங்கை விட ஒத்த செருப்பு Size 7 படத்திற்கு OTT-யில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து பாலிவுட்டிலும் இப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படத்தில் பார்த்திபன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.
ஹாலிவுட்டில் ஒத்த செருப்பு
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஒத்த செருப்பு Size 7 ஹாலிவுட்டிலும் எடுக்கப்போவதாக கூறியுள்ளார். இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், ஹாலிவுட்டில் எடுக்கவிருக்கும் ஒத்த செருப்பு Size 7 படத்தில் வில் ஸ்மித் அல்லது டென்சில் வாஷிங்டன் நடிப்பார்கள். இரண்டு ஆண்டுகளாக இதற்கான முயற்சி நடந்து வருகிறது என அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
பார்த்திபன் இயக்கத்தில் கடந்த வாரம் டீன்ஸ் எனும் திரைப்படம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
