Other Mommy: திரை விமர்சனம்

By Sivaraj Oct 10, 2026 04:50 AM GMT
Report

Other Mommy திரை விமர்சனம்

ஹாலிவுட்டில் சைக்கோலாஜிக்கல் ஹாரர் திரைப்படமாக வெளியாகியுள்ள Other Mommy எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

Other Mommy: திரை விமர்சனம் | Other Mommy Movie Review

கதைக்களம்

பெல்லா எனும் சிறுமி இசபெல்லா தனது அம்மா உர்சுலா, அப்பா ரஸலுடன் வசித்து வருகிறாள். உர்சுலா, ரஸல் இடையே உள்ள உறவின் விரிசலால் பெல்லா பாதிக்கப்படுகிறாள். இந்த சூழலில்தான் தனது அம்மாவைப் போன்ற தோற்றம் கொண்ட அமானுஷ்ய சக்தியை பெல்லா சந்திக்கிறாள்.

அதனை பெல்லா Other Mommy என்று அழைக்க, அந்த உருவமோ இதயத்திற்குள் நுழைய மீண்டும் மீண்டும் கேட்கிறது. ஒரு கட்டத்தில் Other Mommy பெல்லாவை பயமுறுத்தத் தொடங்குகிறது. தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டு பல தொந்தரவுகளை பெல்லாவுக்கு அந்த உருவம் கொடுக்கிறது.

விருந்து ஒன்று நடக்கும்போது பெல்லாவை Other Mommy மோசமாக தாக்குகிறது. அதிர்ஷ்டவசமாக பெல்லா அந்த தாக்குதல்களில் இருந்து உயிர்பிழைக்கிறாள். அதன் பின்னர் அவள் எப்படி Other Mommy-யின் பிடியில் இருந்து தப்பினாள் என்பதே மீதிக்கதை.

Other Mommy: திரை விமர்சனம் | Other Mommy Movie Review

படம் பற்றிய அலசல்

ஸ்ட்ரிங்ஸ், ஹோஸ்ட், தி பூகிமேன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராப் சாவேஜ், இன்சிடெண்ட்ஸ் அரௌண்ட் தி ஹௌவுஸ் என்ற கதையை படமாக கொடுத்துள்ளார்.

சைக்கோலாஜிக்கல் ஹாரர் கதைக்களத்தை கையில் எடுத்துள்ள இயக்குநர், பயமுறுத்துக் கூடிய திகில் காட்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவற்றில் பல காட்சிகள் ஒர்க்அவுட் ஆகியுள்ளன. என்றாலும் திரைக்கதையில் இன்னும் அழுத்தத்தை சேர்த்திருக்கலாம்.

Other Mommy: திரை விமர்சனம் | Other Mommy Movie Review

திரைக்கதையில் புதிதாக எதுவும் இல்லாததால் அடுத்து என்ன என்ற சுவாரஸ்யம் குறைவாகவே இருக்கிறது. எனினும் திகில் காட்சிகள் ஆறுதலாக அமைகின்றன. இன்டெர்ஸ்டெல்லர், தி மார்ஷியன் படப்புகழ் ஜெசிகா சேஸ்டைன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சிறுமியின் தாயாகவும், Other Mommy ஆகவும் மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார். அவரது கணவராக ஜே டுப்ளாஸ் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். இவர்களைத் தாண்டி படத்தில் ஸ்கோர் செய்திருப்பது பெல்லாவாக நடித்திருக்கும் சிறுமி அரபெல்லா ஒலிவியாதான்.

பயப்படும் காட்சிகளிலும், தைரியமாக எதிர்கொள்ளும் காட்சிகளிலும் நல்ல நடிப்பை தந்துள்ளார் ஒலிவியா. பேட்ரிக் ஜோன்சனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். லோவல் மேயெரின் ஒளிப்பதிவு, ஜான் கட்லரின் படத்தொகுப்பு சிறப்பு.

Other Mommy: திரை விமர்சனம் | Other Mommy Movie Review

க்ளாப்ஸ்

சிறுமியின் நடிப்பு திகில் காட்சிகள் பின்னணி இசை

பல்ப்ஸ்

பெரிதாக சுவாரசியம் இல்லாத திரைக்கதை

மொத்தத்தில் இந்த Other Mommy பேய் படம் பார்த்தால் போதும் என்பவர்களை பயமுறுத்தலாம்.

ரேட்டிங்: 2.25/5

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US