பிரபல OTT தளத்தில் வெளியாகும் கர்ணன் திரைப்படம், எப்போது தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்

dhanush karnan
By Jeeva May 07, 2021 06:40 AM GMT
Report

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் கர்ணன், இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

 மேலும் இப்படம் பல உண்மை சம்பவங்களின் தழுவலாக உருவாக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் தொடர்ந்து சிறந்த திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், இப்படமும் தனுஷின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்நிலையில் திரையரங்கில் வெளியாகும் திரைபடங்கள் சில நாட்களிலே OTT தளங்களில் வெளியாகி வருகிறது, அந்த வகையில் தற்போது கர்ணன் திரைப்படம் விரைவில் பிரபல OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

ஆம், கர்ணன் திரைப்படம் அமேசான் பிரைமில் வரும் மே 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US