இந்த வாரம் OTT-யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்.. இதோ லிஸ்ட்!
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு OTT தளங்களில் வெளியாகும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள். சில படங்களை தியேட்டரில் மிஸ் செய்துவிட்டோம் என ஓடிடியில் பார்த்துவிட்டு கமெண்ட் செய்பவர்களும் இருக்கிறார்கள்.
ஓடிடி ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் கொடுக்கும் வகையில் இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்து கீழே காணலாம்.
தங்கலான் :
விக்ரம் ஹீரோவாக ஒரு புதுமையான ரோலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்த படம் தங்கலான். ஆகஸ்ட் 15 - ம் தேதி வெளிவந்த இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

பேச்சி:
எதிர்பார்ப்பு அதிகம் இல்லாமல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற பேச்சி திரைப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது. தற்போது, இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

தலைவெட்டியான் பாளையம்:
இந்தியில் 'பஞ்சாயத்' என்ற பெயரில் வெளியான வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தொடர் தற்போது தமிழில் ரீமேக் செய்து 'தலைவெட்டியான் பாளையம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வெப் தொடர் நாளை அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri