ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமை.. போட்டிபோடும் முன்னணி நிறுவனங்கள்
ஜனநாயகன்
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகவிருந்தது. ஆனால், சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனால் படத்தின் ஓடிடி உரிமை ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜனநாயகன் படம் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழுவிற்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது.

இதனிடையே, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக மாபெரும் வெற்றிபெற்று, தளபதி விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகிவிட்டார். இதனால் ஜனநாயகன் படக்குழு மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓடிடி உரிமை
ஏனென்றால், மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்திருப்பதால், ஜனநாயகன் படத்தின் தமிழக உரிமை விற்பனை பழைய நிலையிலேயே தொடரும் என கூறப்படுகிறது. மேலும், முதலில் ஜனநாயகன் படத்தை அமேசான் ஓடிடி நிறுவனம் வாங்கியிருந்தது. ஆனால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக போட்ட ஓடிடி ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இந்த நிலையில், தற்போது பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்க கடும் போட்டியிட்டு வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளார்களாம்.