இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ
ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை எப்படி திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அது போன்று ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தற்போது படங்களை தியேட்டர்களில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் OTT பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது.
அந்த வகையில், இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.
கண்ணப்பா:
கண்ணப்பா திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்து இருந்தனர். இந்த திரைப்படம் இன்று அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியானது.
பன் பட்டர் ஜாம்:
ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படம் நாளை அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.