குக் வித் கோமாளிக்கு குடித்துவிட்டு வந்தாரா ஓட்டேரி சிவா? அவரே விளக்கம்
குக் வித் கோமாளி 4ம் சீசன் தற்போது தொடங்கி சில வாரங்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் பல புது கோமாளிகளை விஜய் டிவி கொண்டு வந்து இருக்கிறது.
இந்நிலையில் முதல் வாரத்தில் கோமாளியாக வந்த ஓட்டேரி சிவா அடுத்த வாரம் நீக்கப்பட்டுவிட்டார். அவருக்கு பதிலாக டைகர் தங்கதுரையை கொண்டு வந்தனர். ஓட்டேரி சிவா நீக்கப்பட்டதற்கான காரணத்தை கூறாமல், அவரை கெஸ்ட் கோமாளியாக வைத்திருப்பதாக தொகுப்பாளர் ரக்ஷன் தெரிவித்தார்.
குடிபோதையில் வந்தேனா?
ஓட்டேரி சிவா குடிபோதையில் வந்ததால் தான் நீக்கப்பட்டார் என ஒரு செய்தி அதன் பின் இணையத்தில் பரவியது. அது பற்றி அவரே தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார்.
"எனக்கு குடிப்பழக்கம் கிடையாது. எனது குரலே எப்போதும் அப்படிதான் இருக்கும். என்னை பற்றி இப்படி தவறான தகவலை பரப்புகிறார்கள்" என ஓட்டேரி சிவா தெரிவித்து இருக்கிறார்.
குக் வித் கோமாளி 4ல் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் முதல் போட்டியாளர்! எதிர்பார்க்காத எலிமினேஷன்