தளபதி விஜய் குறித்து மோசமாக பரவி வரும் ட்ரோல்ஸ் ! ஆதரவாக பிரபல நிறுவனமே செய்த விஷயம்..

By Jeeva Jun 24, 2022 05:50 AM GMT
Report

விஜய் ட்ரோல்ஸ்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் தற்போது அவரின் 66-வது திரைப்படமாக உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தின் புதிய போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. குறிப்பாக வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதல் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இயக்குநர் வம்சியின் முந்தய படங்களை போலவே வாரிசு போஸ்டர் இருப்பதாகவும், அந்த போஸ்டரில் கூகுள் புகைப்படங்களை பயன்படுத்தியிருப்பதாகவும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதனிடையே அந்த போஸ்டர் குறித்த மீம்ஸ் தான் இணையத்தில் பெரிய வைரலானது.

அந்த வகையில் நடிகர் விஜய் பிரபல ஆடை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்திற்காக போஸ் கொடுப்பது போல் மீம்ஸ் பரவி வந்தது.

இந்நிலையில் குறிப்பிட்ட அந்நிறுவனமே அந்த மீம்-யை பதிவிட்டு இது பொழுதுபோக்கிற்காக தெரியாத நபர்களால் போடப்பட்ட மீம் என்றும், விஜய்யின் வாரிசு படக்குழுவுக்கு தாங்கள் சார்பில் வாழ்த்து தெரிவித்து கொள்ளவதாக பதிவிட்டுள்ளனர்.

தளபதி விஜய் குறித்து மோசமாக பரவி வரும் ட்ரோல்ஸ் ! ஆதரவாக பிரபல நிறுவனமே செய்த விஷயம்.. | Otto Brand Answered To Vijay Trolls

பீஸ்ட் படத்தின் படுதோல்விக்கு பிறகு வாரிசு படத்திற்காக தளபதி விஜய் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US