உடல் எடையை சுத்தமாக குறைத்த பின் நடிகை ஓவியா கலந்துகொண்ட நிகழ்ச்சி- வெளிவந்த புகைப்படம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பெரிய ஹிட் ஷோ பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் முதல் சீசன் ஹிட்டானதுக்கு பெரிய காரணம் நடிகை ஓவியா என்றே கூறலாம்.
அதில் அவர் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்து தனி ஆளாக நிகழ்ச்சியில் வலம் வந்தார், அது ரசிகர்களுக்கு பிடிக்க ஓவியா ஆர்மி சமூக வலைதளங்களில் உருவானது.
நிகழ்ச்சி முடிந்துவந்த ஓவியா அடுத்தடுத்து நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் அவ்வளவாக எதிலும் அவர் கமிட்டாகவில்லை.
அண்மையில் அவர் ஒரு புகைப்படம் வெளியிட அதைப்பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆனார்கள். காரணம் அவர் மிகவும் உடல் எடையை குறைத்து காணப்பட்டார்.
தற்போது அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அதைப்பார்க்கும் போது அவர் பிபி ஜோடிகள் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பதாக தெரிகிறது.