பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய முக்கிய போட்டியாளர்! ரசிகர்கள் கடும் அதிர்ச்சி
ஓடிடி தளத்தில் மட்டும் exclusive ஆக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோ வரும் ஞாயிறு அன்று தொடங்கப்பட இருக்கிறது. டிவி ஷோ போல் 1 மணி நேரம் தான் ஒளிபரப்பு என்பதை தாண்டி 24 மணி நேரமும் இதனை ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர்.
போட்டியாளர்களாக சினேகன், வனிதா, ஜூலி, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி ஆகியோர் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ஓவியா அல்டிமேட் ஷோவில் பங்கேற்பார் என முதலில் இருந்தே கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ஓவியாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், அவர் ஷோவுக்கு வர வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் ஆர்மிக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.